பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!!!


பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் முதலாவது கட்டம் கடந்த செப்ரெம்பர் 2ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு சுழற்சிமுறையில் முகாமைத்துவ, தலைமைதுவம் உள்ளிட்ட பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சிகள் இன்று ஆரம்பமாக இருந்த போதும் அதனை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இராணுவ முகாங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி பயிலுனர் இடமாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அவற்றுக்கு வரும் 16ஆம் திகதிவரை அனுமதியளிக்குமாறும் அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here