A/L பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி நிலையில்..!!!



க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதுமுள்ள 2,648 நிலையங்களில் பரீட்சை நடைபெறும்.

இதேவேளை, ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும்ர் 11 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,936 நிலையங்களில் நடைபெறும்.

இந்த பரீட்சைகளின் போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here