முல்லைத்தீவு மாங்குளம் சந்தி பகுதியில் அரசு பஸ் ஒன்று இன்று பிற்பகல் 3.10 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பஸ் ஆனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய அம்புலன்ஸ் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியது மாத்திரமல்லாது அருகிலிருந்த பாலத்துடன் மோதியும் விபத்துக்குள்ளானது.
பஸ் சாரதிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் விளைவாக இந்த அனர்த்தம் ஏற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறெனினும் விபத்தில் காயமடைந்த பயணியொருவரும், பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
இது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news