கொழும்பில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்..!!!


கொழும்பு, கல்கிஸை கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமைகள் பல கரையொதுங்கியுள்ளதாக கல்கிஸை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்று மாலை வரை மொத்தம் மூன்று கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை காலிமுகத்திடம் பகுதியிலும் உயிரிழந்த நிலையில் சில கடல் ஆமைகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆமைகள் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கியுள்ளமைக்கு காரணங்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Previous Post Next Post


Put your ad code here