இருதரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பைத் தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பருத்தித்துறை நகரில் இன்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதாக பருத்தித்துறை நகர் பகுதியிலிருந்து தகவல் கிடைத்தது. அதுதொடர்பில் விசாரிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அங்கு சென்றிருந்தனர்.
அங்கு மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்வெட்டிப் பிடியால் தாக்கியுள்ளனர். அதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பருத்தித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.