சர்வதேச சிறுவர் தின நிகழ்வு " எமது நாடு எமது கைகளில் " என்ற தொனிப் பொருளுக்கு அமைய கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் சிறுவர் செயற்பாட்டுக் கழக மற்றும் மகிழகப் பொறுப்பாசிரியர் திரு.கு, மகிழ்ச்சிகரன் அவர்களின் தலைமையில்ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றது
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் திரு R.செந்தில்மாறன் அவர்களும், பிரதி அதிபர் திரு.சு.பரமேஸ்வரன் மற்றும் தரம் 6 பகுதித் தலைவர் திருமதி. சித்திரா கந்தசாமி அவர்களும் தமது சிறுவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு . க. சுவாமிநாதன் அவர்கள் "சிறுவர்களின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வும் சிறுவர் சுய பாதுகாப்பும்" தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் மூலம் தனது கருத்தை சிறப்பாக முன்வைத்தார்
சிறுவர் செயற்பாட்டுக் கழகப் பொறுப்பாசிரியர் திரு .கு. மகிழ்ச்சிகரன் அவர்கள் "எனது உடல் எனக்கே சொந்தம் "நல் வழியைத் தேடி .... ஆகிய விடயங்கள் தொடர்பாக இறுவட்டு வீடியோ படம் மூலம் காண்பித்து விளக்கினார்.
முடிவில் அரங்கில் பலூன் விளையாட்டினூடாக எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக உணர்வுரீதியாக அறிந்து கொண்டனர்.
நிகழ்வில் தரம் 6 வகுப்பினைச் சேர்ந்த 360 இற்கு மேற்பட்ட மாணவர்கள், மாணவ முதல்வர்கள் ஆசிரியர்கள் என பலர்
சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.