மாஸ்டர் படம் ஒரு மாஸ்டர் பீஸ்: விஜய் சேதுபதி கூறி இருப்பதை பாருங்க..!!!

மாஸ்டர் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும், அது ஒரு மாஸ்டர் பீஸ் என விஜய் சேதுபதி கூறி உள்ளார்.

மாநகரம், கைதி போன்ற படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படம் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும். ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தொடர்ந்து பல மாதங்களாக தாமதமாகி இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக
விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். அவர்கள் இருவரும் மோதும் காட்சிகள் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி மாஸ்டர் படம் பற்றி பேசியிருக்கிறார். "ஒவ்வொருவர் மனதிலும் ஒரு அழுக்கு நிச்சயம் இருக்கும். அதையெல்லாம் வெளியேற்ற ஏதாவது வழி இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடித்தால் அதை வெளிக்கொண்டு வர முடியும். நான் அந்தப் படத்தில் கொடூர கேங்ஸ்டர் ஆக நடித்து இருக்கிறேன். ஆனால் அதை நான் அதிகம் என்ஜாய் செய்தேன்" எனக் கூறியிருக்கிறார்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இளம் வயது பிளாஷ்பேக் காட்சிகளில் இளம் விஜய் சேதுபதி ரோலில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார்.

மேலும் மாஸ்டர் படம் பற்றி பேசிய விஜய் சேதுபதி, "அது மாஸ்டர் பீஸ்" என கூறியிருக்கிறார். மாஸ்டர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் சமீபத்தில் தான் லாபம் பட ஷூட்ட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
Previous Post Next Post


Put your ad code here