அதிக விலைக்கு விற்பனை செய்தால் உடனடியாக முறைப்பாடு செய்யவும் : யாழ். அரச அதிபர்..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவின் 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்றன என தெரிவித்த அரசாங்க அதிபர், எனினும் இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாகவும், எனவே அரசாங்கத்தினால் நிர்னயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் குறித்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Previous Post Next Post


Put your ad code here