கம்பஹா மாவட்டம் வெயங்கொட பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றிரவு 8.45 மணிக்கு இந்த அறிவிப்பை பொலிஸ் விடுத்துள்ளது.
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட, திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று முற்பகல் தொடக்கம் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் வெயங்கொட பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
திவுலபிட்டியவைச் சேர்ந்த தாய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இந்த பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news