ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 34 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 17 ஆவது போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இன்று பிற்பகல் ஆரம்பமானது.
சார்ஜாவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை குவித்தது
209 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 34 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
ஐதராபாத் அணி சார்பில் ஜோனி பெயர்ஸ்டோ 25 ஓட்டங்களுடனும், டேவிட் வோர்னர் 60 ஓட்டங்களுடனும் மனீஷ் பாண்டே 30 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 03 ஓட்டங்களுடனும், பிரியாம் கார்க் 8 ஓட்டங்களுடனும், சமட் 20 ஓட்டங்களுடனும், அபிஷேக் சர்மா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ரஷித் கான் 03 ஓட்டத்துடனும், சண்டிப் சர்மா எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் பும்ரா, டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும், குருனல் பாட்டியா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதேவேளை ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ள மற்றொரு போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.
Tags:
Sports News