வவுனியா மாவட்டத்தில் கோவிட் -19 சுகாதார நடைமுறையினை நாளையதினம் (05.10.2020) தொடக்கம் பொதுமக்கள் , வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென வவுனியா பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் அனைவருக்கும் சமூக இடைவெளி , முகக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
