கொழும்பு மாவட்டத்திலும் தனியார் வகுப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்ததம்..!!!


நாளைய தினத்தில் ஆரம்பமாகவுள்ள பாடசாலை விடுமுறையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் அனைத்து தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் உள்ளடங்குவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் அனைத்து தனியார் வகுப்புகளை நடத்துவது மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்;பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here