கம்பஹாவில் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கம்பஹா, திவுலுப்பிடிய, மினுவாங்கொட,வெம்முல்ல, மொரகஸ் முல்ல, வெவகெதர,ஹப்புவலான,ஹேன்பிடிகெதர மற்றும் கன்ஹின்முல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்துவர்களுக்கே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றை அடுத்தே இத் தீர்மானம் மே்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news