யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூயாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 500 ரூபாயால் அதிகரித்துள்ளது.
தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கடந்த செப்ரெம்பர் 7ஆம் திகதி அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயால் குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது. எனினும் இறக்குமதி மீதான வரி நீக்கத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (12 ) திங்கட்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 95 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 92 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தூய தங்கத்தின் விலை!
24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது.