பொறியியலாளராகி வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவேன் : 195 புள்ளிகள் பெற்ற மாணவன்..!!!


பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என 2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்ற மாணவன் ச .ஆர்வலன் தெரிவித்துள்ளார்.

மாணவன் தொடர்ந்து தெரிவிக்கையில்..

நான் 2020 ம் ஆண்டுதரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை பெற்றுள்ளேன் என்னைப்போல் பரீட்சைக்கு தோற்றிய எமது பாடசாலை மாணவர்கள் அதிகளவானோர் சித்தியடைந்துள்ளார்கள்

அதேபோல் இந்த பரீட்சையினை பொறுத்தவரைக்கும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கு சென்றாலும் வீட்டில் அதனை மீட்டு படிப்பதன் மூலமே பரீட்சையில் இலகுவாக சித்தி அடைய முடியும்.

அத்தோடு 195 புள்ளி பெறுவதற்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் தனது பெற்றோருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை புலமைப் பரிசில் பெறுபேற்றின் படி கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.மகேந்திரராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 57 வீதம் மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் இவ்வருடம் 63 வீதமானவர்கள் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்துள்ளார்கள் என பாடசாலை அதிபர் என்.மகேந்திரராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here