198 புள்ளிகளுடன் வடக்கில் முதலிடம் பெற்ற மாணவி..!!!


யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மகாஜனக் கல்லூரியில் இம்முறை 84 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இதில் 36 மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

நீண்ட வருடத்தின் பின்பு பாடசாலையில் இவ்வாறு அதிகமான மாணவர்கள் சித்திபெற்றுள்ளதாக பாடசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.






Previous Post Next Post


Put your ad code here