இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு..!!!


நாட்டில் மேலும் 5 கோவிட் -19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட  கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 3 வாரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 12 ஆயிரத்து 187 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

1. கொழும்பு-2ஐச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவர் நீண்ட நாள்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2. வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு நெஞ்சுவலி இருந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

3. கொழும்பு – 12ஐச் சேர்ந்த 58 வயதுடைய பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு இருதய நோய் இருந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4. கொழும்பு-14ஐச் சேர்ந்த 73 வயதுடைய பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5. கொழும்பு 15ஐச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு இருதய நோய் இருந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here