நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி - மண்டைதீவில் சோகம்..!!!


யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நீரில் மூழ்கி சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

மழைநீர் சேகரிக்கும் குன்றுக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை சடலங்கள் யாழ். போதனா வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post