யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சியாக யாழ்ப்பாண நகரில் 173.4 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளது என யாழ் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்றுக் காலை 8.30 தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்திலேயே 173.4 மி.மீ பதிவாகியுள்ளது.
யாழ் நகருக்கு அடுத்த நிலையில் திருநெல்வேலியில் 153.2 மி.மீ, அச்சுவேலியில் 68.7 மி.மீ, பருத்தித்துறையில் 40.1 மி.மீ, நயினாதீவில் 65.3 மி.மீ, சாவகச்சேரியில் 39.8 மி.மீ, தெல்லிப்பளையில் 35.0மி.மீ பதிவாகியுள்ளது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்