திருகோணமலையில் 75,000 பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைப்பு..!!!

File Photo

திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும்  75 ஆயிரம் பேரை பாதுகாப்பின் நிமித்தம் 237 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து இன்று இரவு மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையில் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூறாவளியானது கிழக்கு கடற்கரையை ஊடறுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணம் அதிக பாதிப்புக்குள்ளாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும்  75 ஆயிரம் பேரை இவ்வாறு பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here