“புரவி” சூறாவளியின் பாதையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இன்று மாலை அல்லது இன்றிரவு திருகோணமலைக்கு அருகே சூறாவளி நாட்டிற்குள் நுழையும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் தற்போது இந்த அமைப்பு முல்லைத்தீவுக்கு அண்மையாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க கூட்டு சூறாவளி எச்சரிக்கை மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
![]() |
| நேற்று வெளியிடப்பட்ட படம் |

