இன்று(06) மாலை தொடக்கம் நாளை காலை(07) வடக்கு மாகாணத்தில் கனமழை கிடைக்க வாய்ப்புண்டு. மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம் என யாழ் பல்கலைக்கழக புவியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பி.ப 3 மணிவரையான நிலவரப்படி மன்னார் வளைகுடாவில் வலுக்குறைந்து தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயலானது கடற்பகுதியில் அழிவடைந்து வருகின்றது. எனினும் எதிர்வரும் புதன்கிழமை வரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்க வாய்ப்புண்டு. இன்று மாலை தொடக்கம் நாளை காலை(07) வடக்கு மாகாணத்திற்கு கனமழை கிடைக்க வாய்ப்புண்டு. மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம் என தெரிவித்தார்.
