க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2021 மார்ச் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் அவர் இதனை அறிவித்தார்.
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதிவரை நடத்தத் திட்டமிடப்படிருந்தது. பரீட்சைக்கு 6 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று பரவல் நிலமையையால் பாடசாலைகள் பல மூடப்பட்டுள்ள நிலையில் பரீட்சையை திட்டமிட்ட நேர அட்டவணை பிற்போடப்பட்டது
