யாழ். பல்கலைக் கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை அடுத்த வருடம் பெப்ரவரி 24ஆம், 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று(2) பட்டமளிப்பு விழா முன்னாயத்தக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் பெப்ருவரி 24ஆம், 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 2 ஆயிரம் பட்டங்களை வழங்குவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கில் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கும் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனாத் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவது தொடர்பில் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாக் குழு விரைவில் கூடி ஆராயவுள்ளது.
