கடந்த 30 நாளில் யாழில் 496 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 496 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு 2021 ஆம் ஆண்டில் இதுவரை 668 கொரொனா தொற்றாளர்கள் யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here