யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் பிலீப் என்பவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்றைய பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு தொற்று ஏற்படுவதற்கான தொடர்புகள் தொடர்பில் தெரியவில்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்