யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று; நால்வர் பொலிஸ்..!!!


யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் ஆய்வு கூடத்தில் 350 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Previous Post Next Post


Put your ad code here