வடக்கில் இன்று 25 பேருக்கு கொரோனா தொற்று..!!!


வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 454 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 7 பேரும் மன்னார், வவுனியா மாவட்டங்களில் தலா 4 பேரும் முல்லைத்தீவில் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேரும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருமாக 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பூவரசம் குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்ககு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்ற தலா ஒரு நோயாளிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Previous Post Next Post


Put your ad code here