வடக்கு மாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை (15.05.2021) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 858 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் என 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தொற்றாளர்களுடன் முதல்நிலைத் தொடர்பாளர்களாக சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தரும்புரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 16 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவருக்கும் என 36 பேருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 15 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக (கச்சேரி) உத்தியோகத்தர்கள் இருவர் உள்ளடங்குகின்றனர்

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Previous Post Next Post


Put your ad code here