நெல்லியடியில் வெற்றிலை வியாபாரிக்கு கொரோனா தொற்று ..!!!




யாழ்ப்பாணம் - நெல்லியடி சந்திக்கு அருகாமையில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை இதன் முடிவுகள் வெளியாகின.
இவரிடம் வெற்றிலை வாங்கியவர்கள் நோய் அறிகுறிகள் தென்படின் உடனடியாக தமது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நெல்லியடி பகுதியில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் முகக் கவசம் அணியாத பலரை சுய தனிமைப்படுத்தி வைக்குமாறு அந்தந்த பகுதி சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனால் குறித்த வியாபாரியும் முகக் கவசம் அணியாமல் காணப்பட்டதால் அவரும் சுயதனிமைப்படுத்தி பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here