யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை நிலையம் - முழுமையான விபரங்கள்..!!!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பழைய வெளிநோயாளர் (OPD) கட்டடத் தொகுதியில் இலகுவாக அணுக்க்கூடிய வகையில் வாரத்தில் 7 நாட்கள் செயல்படும் சுய பரிந்துரை மையம் நீங்களாகவே தீர்மானித்து தொடர்புகொள்ளலாம்.

அனைத்து 7 நாட்களும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயற்படும்
நேரடி தொடர்பு தொலைபேசி இலக்கம் - 0212222640 அழைத்து உங்கள் சந்திப்பு நேர விபரம் பெறுங்கள்

ஆரம்பத்தில் அடையாளம் காணப்படும் மற்றும் முறையாக, முழுமையாக சிகிச்சை அளிக்கப்படும் புற்றுநோய் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு மிகமிக அதிகம்

புற்றுநோய் என்பது உடற்கலங்களின் கட்டுப்பாடற்ற பெருக்கமாகும், இது உருவான அங்கம் மற்றும்,தொலைவான அங்கங்களையும் ஆக்கிரமித்து பரவி அழிக்க வல்லது. ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிய முடிந்தால் அது பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியது. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த மோசமான நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதில் எப்போதும் முழு முயற்சி எடுக்க வேண்டும்.

வடக்கின் பொதுவான புற்றுநோய்கள்
■ வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்
■ மார்பக புற்றுநோய்
■ மேல் உணவுக்குழாய் புற்று - களம் மற்றும் இரைப்பை
■ கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
■ தைராய்டு புற்றுநோய்
■ பெருங்குடல் புற்றுநோய்
■ தோல் புற்றுநோய்கள்
■ கருப்பை புற்றுநோய்கள்
■ ஈரல், சதையி மற்றும் பித்தக்குழாய் புற்றுநோய்கள்
■ சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதை  புற்றுநோய்கள்
■ சர்கோமா - மென்மையான இழைய தசைப் புற்றுநோய்கள்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
■ உங்களுக்கு புற்றுநோய் இருப்பதாக ஒரு பயம் இருந்தால்
■ உங்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால்
■ உங்களுக்கு நெருங்கிய உறவுகளிற்கு புற்றுநோய் இருந்தால்
■ நீங்கள் புற்றுநோயைப் பெறுவதற்கான அதிக வாப்புள்ள நபராக இருந்தால்
● 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் குறிப்பாக பெண்கள்
● குடும்ப வரலாறு - குறிப்பாக நெருங்கிய இளவயது உறவினர்களின் புற்றுநோய்
● குழந்தைகள் இல்லாத பெண்கள்
● புகைத்தல் மது அருந்துதல்
● வெற்றிலை மெல்லுதல் புகையிலை மெல்லுதல்
 

மருத்துவ உதவியை நாடுங்கள்   

புற்றுநோயைப் பற்றி நீங்கள் எப்போது சிந்திக்க வேண்டும்?
பொதுவான அறிகுறிகள்
■ விவரிக்கப்படாத எடை இழப்பு
■ கடுமையான பசி இழப்பு - குறிப்பாக  உங்களுக்கு பிடித்த உணவுகளுக்கான
ஆர்வத்தை இழத்தல்
■ கட்டிகள் - உடலில் எப்பாகத்திலும்  குறிப்பாக வேகமாக வளரும் கட்டிகள்

  1. மார்பகம்
  2. அடிவயிறு
  3. அக்குள்
  4. கழுத்து
  5. இடுப்பு, தொடைப் பகுதிகள்

■ ஆறாது விரிந்து பரவும் புண்கள்

  1. ● வாய் மற்றும்
  2. ● அவயவங்கள்
  3. ● உடலின் எப்பகுதியிலாபினும்

■ கறுப்பு நிற மலம் - தார் போன்ற தன்மை
■ மலத்தில் இரத்தம்
■ நீடிக்கும் இரத்த சோகை மற்றும் களைப்பு
■ உணவு விழுங்குவதில் தடங்கல்/ சிரமம்
■ வாந்தியில் இரத்தம்
■ சிறுநீரில் இரத்தம்
■ மாதவிடாய் அல்லாத இரத்தப்போக்கு
■ குடல் பழக்க குழப்பங்கள்

  1. நீடித்த மலச்சிக்கல்
  2. முழுமையடையாத மல வெளியேற்ற உணர்வு
  3. அடக்க முடியாத அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு
  4. இரத்தத்துடன் நீடித்த வயிற்றுப்போக்கு
  5. கட்டுப்பாட்டை இழந்த மலக்கழிவு
  6. விவரிக்கப்படாத வலி - வழக்கமான சிகிச்சைகளுக்கு அடங்காத வலி
  7. அடிவயிறு
  8. மார்பு
  9. எலும்புகளுக்கு மேல்
  10. முதுகு வலி ஸ்கிரீனிங் (புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திட்டங்கள்) - இலங்கையில் மற்றும் வடக்கே மாற்றியமைக்கப்பட்டது

■ மார்பக புற்றுநோய்

  1. மருத்துவ பரிசோதனை
  2. Mammogram (ஊடுகதிர் மார்பகப் பரிசோதனை)
  3. Ultrasound scan (கழியொலி அறிவருடல் பரிசோதனை)

■ கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

  1. மருத்துவ பரிசோதனை
  2. PAP smear

■ வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்

  1. ● மருத்துவ பரிசோதனை
  2. ● Endoscopy procedure (உள் காணொளிக் குளாய்ப் பரிசோதனை)

■ களம் மற்றும் இரைப்பை புற்றுநோய்

  1. மருத்துவ பரிசோதனை
  2. Endoscopy procedure (உள் காணொளிக் குளாய்ப் பரிசோதனை)

"புற்றுநோய்க்கு பயப்பட வேண்டாம். உசாராக சூட்டிகையாக இருப்பதன் மூலம் நாம் அதை வெல்ல முடியும் "
□ உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க கருத்துப் பகுதியைப் பயன்படுத்தவும்
□ தேவைப்பட்டால் செய்திப் பெட்டியில் தொடர்பு கொள்ளுங்கள்
□ தேவைப்பட்டால் 0212222640 என்ற தொலைபேசிக்கு அழைப்பெடுத்து.
உங்களுக்கான நேர நியமனங்களை பதிந்து கொள்ளலாம்
□ நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் இருந்தால் அல்லது ஏதேனும்
சிரமம் இருந்தால் அருகில் உள்ள மருத்துவ  உதவியை நாடவும்.
□ குறிப்பிட்ட புற்று நோய்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விரைவில்.
விவாதித்தறியலாம்
□ புற்றுநோய்க்கான அடிப்படை மற்றும் மேம்பட்ட அறுவை சிகிச்சை முறைகள்
மற்றும் பிற சிகிச்சை முறைகளை எம்மண்ணில் இலவசமாக பெற்றுக்கொள்ள
முடியும். வீண் அலைச்சல், நேர மற்றும் பண விரயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
□ யாழில் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவக்கூடிய இல்லாத உபகரணங்கள்
1. PET scan
2. HIPEC system
3. Endoscopy ultra sound
 

 வைத்திய கலாநிதி சிறிதரன்
புற்றுநோய் அறுவைசிகிச்சைக் குழு

Previous Post Next Post


Put your ad code here