எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தமது மனைவிக்கு தொற்று உறுதியாகியதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, தாமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டபோதே, தனக்கும் தொற்று உறுதியானதாக சற்றுமுன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
Tags:
sri lanka news