Friday, 11 June 2021

யாழ்ப்பாணத்தில் 116 பேர் உள்ளிட்ட 144 பேருக்கு வடக்கில் கொரோனா..!!!

SHARE


யாழ்.மாவட்டத்தில் 116 பேர் உள்ளிட்ட 144 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் நேற்றைய தினம் வியாழக்கிழமை 947 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழில். கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேருக்கும் , யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேருக்கும் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர் , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் 13 பேர் உள்ளடங்கலாக யாழில் 116 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை வவுனியாவில் 23 பேருக்கும் , முல்லைத்தீவில் 3 பேருக்கும் மன்னாரில் ஒருவருக்கும் உள்ளடங்கலாக வடக்கில் 144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

SHARE