நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள்..!!!
நாட்டில் மேலும் 101 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,011ஆக அதிகரித்துள்ளது.
நாளொன்றில் வெளியிடப்பட்ட அதிகபட்ச கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கடந்த 10 நாட்களில் இலங்கையில் 527 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வரும் நிலையில், இவ்வாறு கொரோனா மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.