ஜூன் 14ஆம் திகதிக்குப் பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திட்டமிடப்பட்டபடி நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.