மீள் குடியமர்த்தப்படாத மக்களுக்கு யாழ் மாவட்ட செயலாளரின் விசேட அறிவிப்பு..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமர்த்தப்படாத மக்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு தங்களுடைய பெயர், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கோள்ளுமாறு யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விவரங்களை இற்றைப்படுத்தும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே யாழ் மாவட்ட செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து தற்போதும் வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விவரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியமராத குடும்பங்களின் விவரங்கள் அவர்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களினால் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றன என்று மீள்குடியமர வேண்டியவர்களின் விவர மீளாய்வு தொடர்பில் மேலதிக மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here