யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர், மாணவி ஒருவர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் உட்பட்ட 185 பேருக்கு நேற்று (11) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் 173 பேருக்கு தொற்றில்லை என்றும் 12 பேருக்கு மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
இந்நிலையில் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மீளவும் 12 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முடிவுகளின் அடிப்படையில் மாணவன் ஒருவர் மாணவி ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே மேலும் ஒருவருக்கு மீளவும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.