வடக்கு பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் சமன் பந்துலசேன நியமனம்..!!!


வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம். சமன் பந்துலசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரை நியமிப்பதற்காக கடந்த வாரம் முதல் ஆராயப்பட்ட நிலையில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்எஸ்.எம். சமன் பந்துலசேனவை வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here