கர்ப்பமாக இருக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்..!!!


ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுந்தர்யாவிற்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுடன் கடந்த 2019ம் ஆண்டில் திருமணம் நடைடபெற்ற நிலையில் தற்போது சவுந்தர்யா கர்ப்பமாக இருக்கின்றார்.

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தந்தை ரஜினிகாந்த் வந்ததும், இந்த மகிழ்ச்சியான விடயத்தினை கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் கிருஷ்ணா என்கிற மகன் இருக்கிறார். சவுந்தர்யாவின் மறுமணத்தின்போதும், அதன் பிறகும் விசாகன் எப்பொழுதும் வேதுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அவரை வாழ்த்தினார்கள்.

வேதுக்கு நல்ல அப்பா கிடைத்துவிட்டார் என்றார்கள். இந்நிலையில் வேத் கிருஷ்ணாவுக்கு விரைவில் தம்பியோ, தங்கச்சி பாப்பாவோ வரப் போகிறது.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டுமே ஆண் பிள்ளைகள் என்பதால் தற்போது சவுந்தர்யாவிற்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்
Previous Post Next Post


Put your ad code here