அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நேரில் சென்று கேட்டறிந்தார் சசிகலா.
வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.
நேற்று அவருடைய உடல்நிலை மோசம் அடையவே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அவர் மருத்துவமனைக்கு உள்ளே இருக்கும் போது, அதிமுக கொடி பொருந்திய காரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் சசிகலா.
அங்கு மருத்துவர்களிடம் மதுசூதனின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் மீண்டும் ‘அதிமுக கொடியை’ பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
Tags:
india