யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகரத் தூய்மையை மேம்படுத்தல் மற்றும் அழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படவுள்ளது.
இவ் செயற்றிட்டத்தின் திட்ட வரைபினை அங்குரார்பணம் செய்கின்ற நிகழ்வு மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இன்றைய தினம் காலை ஆரியகுளத்தில் நடைபெற்றது.
குறித்த செயற்திட்டத்திற்கான நிதியுதவிகளை தியாகி அறக்கொடை நிறுவன உரிமையாளர் வாமதேவா தியாகேந்திரன் வழங்கியுள்ளார்.
குளம் புனரமைப்பின் பின்னர் எவ்வாறு காட்சி அளிக்கும் என்பதற்கான மாதிரி காட்சி வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை conopus நிறுவன உரிமையாளர் துளசிவர்மன் வடிவமைத்துள்ளார்.
குறித்த வீடியோ காட்சியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.