பொதுவாக மழைக்காலத்தில் சாதாரணமாக உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அந்தவகையில் மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை இருமடங்கு அதிகரிக்க உதவும் உணவுகள்
தர்பூசணியில் குளுதாதயோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்பமுத்தி, மழைக்காலத்தில் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிரிக்கும். அதோடு, இதில் சல்போரஃபேன் போன்ற பல ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் வளமான அளவில் இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
பசலைக்கீரையில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தவும் தேவையான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மழைக்காலத்தில் பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.
பீட்ரூட் உடலை ஆரோக்கியமாக மாற்றக்கூடிய பல நன்மைகளால் நிரம்பியுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. அதோடு இது உடலின் நோயெதிப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
ஆரஞ்சு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், உடல் செல்களை பாதிப்படையாமலும் பாதுகாக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு அற்புதமான உணவுப் பொருள் கொழுப்பு குறைவான யோகர்ட் ஆகும். யோகர்ட்டில் உள்ள புரோபயோடிக்குகள், தீவிரமான சளியில் இருந்து விடுவிக்கும். அதோடு இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை உட்கொண்டால் விரைவில் அதிலிருந்து விடுபடலாம்.
காளான்கள் சுவையான உணவுப் பொருள் மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு அற்புதமான உணவுப் பொருள். மேலும் காளான்கள் குறைப்பிட்ட புற்றுநோய்கள் மற்றும் இதய நோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடியவை.