Wednesday 7 July 2021

ஆபத்தான 'லெம்டா' வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை..!!!

SHARE


கொவிட்-19 வைரஸின் சமீபத்திய திரிபு என அடையாளம் காணப்பட்ட லெம்டா திரிபு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்தா ஹேரத் தெரிவித்தார்.

லெம்டா விகாரத்தினால் ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மருத்துவர் ஹேமந்த ஹேரத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, ​​“சரியான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் இந்த புதிய ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று கூறினார்.

பெருவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட லெம்டா திரிபு, லத்தீன் அமெரிக்காவில் பரவி தற்போது 31 நாடுகளுக்கு பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வீடுகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதார அமைச்சுக் கூறுகிறது.

இன்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பிரிவு பணிப்பாளர், மருத்துவர் தீபா சரணஜீவா, நாடுமுழுவதும் பெரியவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவர்களில் குறைந்த சதவீதமானோரே கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

SHARE