இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு இன்று (15.08.2021) காலை யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் கொண்டாடப்பட்டது.
கொரோணா கால சூழ்நிலை அடிப்படையில் மிக அமைதியான முறையில் கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் புதிய தூதுவராக பதவியேற்கப்பட்ட பின் கெளரவ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதன்முதலாக பங்கு பற்றும் இந் நிகழ்வில் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் மற்றும் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு ஆகியோர் பலாலி யில் அமைந்துள்ள இந்திய அமைதிப் படையினரின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய துணைத்தூதரகமானது வடமாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையே கட்டுரைப் போட்டியினையும் நடாத்தி உள்ளனர்.
இப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய வடமாகாணத்தைச் சேர்ந்த. 15 வெற்றியாளர்களின் பெயர் மற்றும் பாடசாலை விபரங்களும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் மிக விரைவில் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி