லாப்ஸ் நிறுவனத்தினுடைய சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவிவருகின்ற நிலையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் இதற்கான கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் எழுத்துமூலமாக முன்வைத்திருப்பதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Tags:
sri lanka news