பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (15) தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் தங்காலை கால்ட்ன் இல்லத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு இதுவரை மகளிர் வார்டு வளாகத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
புதிய பிரிவு நிறுவப்பட்டதன் ஊடாக சிறுவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவுகளை அனைத்து மாகாணங்களிலும் நிறுவுவதே சிறுவர் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் எண்ணக்கருவாகவுள்ளது.