இன்று 3000 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!


கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,073 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 2,720 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 373,152 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,186 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here