தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கொழும்பின் பிரதான வீதிகள் பலவற்றில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு மேலதிகமாக ஏனைய அத்தியாவசிய காரணங்களுக்காக பல வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்துள்ளது.
பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரால் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக, பல வாகனங்களுக்கு மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், பயணத்தடைகளை கடுமையாக்காவிட்டால் தற்போதைய ஊரடங்கு உத்தரவில் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை என சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Tags:
sri lanka news