குறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன ?


குறைந்த இரத்த அழுத்தம்
Low Blood Pressure -– HYPOTENSION

தீராத நோய்­க­ளின் பட்­டி­ய­லில் முதலிடத்­தில் வரு­வது இரத்த அழுத்­தம் –  உயர் இரத்த இழுத்­தம்&குறை இரத்த அழுத்­தம்.
ஆனால் 90% வீத­மான விழிப்­பு­ணர்வு உயர் இரத்த அழுத்­தம் பற்­றியே மக்­க­     ளுக்கு இருக்­கின்­றது

குறைந்த இரத்த அழுத்தம்– அறிகுறிகள்
1. தலைசுற்றல்
2. மயக்கம்/ உணர்விழப்பு
3. வாந்தி
4. வழமைக்கு மாறான நா வறட்சி
5. சோர்வு/ பலவீனம்
6. பார்வை குறைதல்
7. கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு
9. உடல் சில்லிட்டு போவது
மேற்கூறியவற்றில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் இரத்த அழுத்தம் குறைகிறது என்று அர்த்தம்.

குறை இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புக்கள்
கர்ப்பகாலம் (பிரசவத்துக்குப் பிறகு சரியாகிவிடும்)
நீரிழப்பு – அதிக காய்ச்சல், வாந்தி ஏற்படும்போது,
கடுமையான உடற்பயிற்சி - eg: விளையாட்டு வீரர்களுக்கு
நோய்கள்/ இதய வால்வு/ துடிப்பு கோளாறுகள், மார டைப்பு, இதய செயலிழப்பு, வரிக்கோஸ்
விபத்துக்களால் ஏற்படும் அதிக இரத்த இழப்பு (>500ml பொதுவாக) ..... நாளம், நாடி, சிதைவு ஏற்படுதல்.
ஹார்மோன் கோளாறுகள்: தைரொயிட் / பராதை ரொயிட்/ பிட்பூட்டரி சுரப்பு குறைபாடுகள் கட்டுப் பாடற்ற நீரிழிவு
தீவிர நோய்த்தொற்று– Septicemia
ஒவ்வாமை – Allergy, விஷக்கடி
சத்துக்குறைபாடு – இரத்தசோகை
சில மருந்துகள் – மனவழுத்த/ பார்க்கின்சன் நோய் /சிறுநீரைப் பிரியச் செய்யும்/வயாகர (viagra)போன்ற மருந்துகள்
உயர் இரத்தவழுத்த மாத்திரையை அளவுக்கதிகமாக உட்கொள்வது.

தோட்­டத்­தில் குழாய்­க­ளில் நீர் பாய்ந்­தோ­டு­வது போலத்­தான் இரத்­த­மா­னது இரத்த நாடி, நாளங்­க­ளில் ஒரு (artery &veins ) பாய்ந்­தோ­டு­கின்­றது!!!!
இத­யத்தை நோக்கி வரும்­போது ஒரு குறித்த வேகத்­தி­லும் ,விட்டு வெளியேறும்­ போது ஒரு வேகத்­தி­லும் பாய்ந்­தோ­டு­கின்­றது.
இந்த வேகங்­க­ளுக்கு பெயர்­தான் இரத்த அழுத்­தம்.

பொது­வாக 120/80 mmHg இருப்­பது இயல்பு.
120 – சிஸ்­டா­லிக் அழுத்­தம்.
அதா­வது இத­யம் சுருங்கி இரத்­தத்தை தள்­ளும்­போது ஏற்­ப­டு­கி­றது. –சுருங்­க­ழுத்­தம்.
80– டியஸ்­டா­லிக் அழுத்­தம் : இத­யம் இரத்­தத்தை வெளி­யேற்­றிய பிறகு தன்­ன­ள­வில் விரிந்து உட­லில் இருந்து வரும் இரத்­தத்தை பெறும்­போது ஏற்­ப­டும் அழுத்­தம் - விரி­வ­ழுத்­தம்.

ஆனால் 120/80 என்று எல்­லோ­ருக்­கும் சொல்­லி­வைத்­தால் போல் இது இருக்க வேண்­டு­மென்­றில்லை.

உடல், எடை, உய­ரம் போன்ற பல கார­ணி­க­ளுக்­கேற்ப இது வேறு­ப­டும்.

WHO வானது 120/80 இலி­ரி­ருந்து 140/90 வரை சாதா­ரண இரத்த அழுத்­த­மாக வரை­யறை செய்­துள்­ளது.

140/90 இற்கு மேல் உயர் இரத்த அழுத்­த­மா­க­வும்
90/60 இற்கு கீழே குறை இத்த அழுத்­த­மா­க­வும் கணிப்­பி­டப்­ப­டு­கி­றது. (arterial hypotension)
இத­யத்­துக்கு தேவைப்­ப­டும் இரத்­தம் செல்ல தடை உண்­டா­வ­து­தான் குறை இரத்த அழுத்­தத்­தின் அடிப்­படை.

மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்
1. ஈசிஜி– ECG
2. எக்கோ – ECHO
3.வழமையான இரத்தப் பரிசோதனைகள் (Basic blood investigation)
4. Til – table test

சிகிச்சை
அடிப்­ப­டைக் கார­ணத்தை அறிந்து மருத்­துவ உத­வி­யு­டன் சரி­செய்ய  வேண்டும்.
மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னை­யின்­படி உண­வில் உப்பை அதி­க­ரித்­தல்
நிறைய தண்­ணீர் அருந்­து­தல்
காலு­றை­கள் அணி­வது
சரி­யான போசாக்கு விகி­தா­சா­ர­முள்ள உணவு உட்­கொள்­ளல்
­தே­வை­யான மாத்­தி­ரை­கள் மருத்­து­வர் பரிந்­து­ரைப்­பர்.

உயர் இரத்த அழுத்­தம் – அமை­தி­யான ஆட்­கொல்லி நோயா­கும்.-Silent Killer!!!
இதே­போல் குறை இரத்த இழுத்­தம்– எரி­மலை Volcano !!!என்று அழைக்­கப்­ப­டும்.
எரி­மலை எப்­பொ­ழுது குமு­றும் என்று கணிப்­பிட முடி­யாது. அது­போ­ல­தான் பல நேரங்­க­ளில் இது ஆபத்­தில்­லாத நோயாக இருப்­பி­னும்; திடீ­ரென்று உயி­ரா­பத்து விளை­விக்­கக் கூடிய ஒன்று. அவ­தா­ன­மாக இருங்­கள். மருத்­துவ ஆலோ­ச­னையை சரி­யா­கப் பின்­பற்­றுங்­கள்.!!!

மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம்
( யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
– சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலை )

Previous Post Next Post


Put your ad code here