Wednesday 29 September 2021

வடக்கில் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய மூவர் நியமனம் - வடக்கு ஆளுநர்..!!!

SHARE

வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காணி சுவிகரிப்புக்கள் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேவளை பொதுமக்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

நிகழ்நிலை ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் தற்போதைய சூழலில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலைதரும் விடயமாக உள்ளது இதனை அனுமதிக்கக முடியாது இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறேன்.

அது மட்டுமன்றி வடக்கில் இடம்பெற்று வரும் சம்பங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக மூவரை நியமனம் செய்துள்ளேன் அவர்கள் தொலைபேசி இலங்கங்களுக்கு என்னேரமும் தொடர்புகளை எற்படுத்தி முறைப்பாடுகளை வழங்கலாம் இதன்முலம் கிடைக்கும் முறைப்பாடுகளுக்கேற்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் தொடர்ந்தும் மக்களுக்கு சேவையே செய்துவருகின்றேன். அதனை தொடர்ந்தும் செய்து வருகின்றேன். போரில் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் அதிலிருந்து மிட்க வேண்டும்.

அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கத்திற்கு அமைவாக பல அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் இடம்போற்று வருகின்றது. குறிப்பாக கல்வி விவசாயம் போன்றவற்றில் முன்னேற்றகரமான திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கல்வியை பொறுத்து வரையில் வடக்குமாகாணம் பின்தங்கியிருந்த்து தற்போது முன்னிலைக்கு வந்துள்ளது.

இதற்காக உழைத்த மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அனைவருக்கும் நன்றியை கூறிக்கொள்வதுடன் தொடர்ந்தும் முன்னேறி செல்வதற்கு உழைக்கவேண்டும்.

நிர்ப்பாசனம் குடிநிர் திட்டங்கள் அடுத்தவாரம் பிரதமரால் நிகழ்நிலையுடாக ஆரம்பித்துகைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் குடிநீர்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இவ்வாறாக பல திட்டங்கள் முன்னேற்றமாக இடம்பெற்று வருகின்றன. இத்தகைய திட்டங்கள் இடம்பெறுகின்ற போது அனைவருடைய ஒத்துளைப்புகள் ஒருமித்து கிடைக்கும் போது அவை விரைவாக மக்களை சென்றடையும்.

இதேவேளை, தொலைபேசி இலக்கம் 0768095139, 0718581242 ,0777229338 குறித்த இலக்கங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்றார்.
SHARE